'மனைவியை' வீட்டில் 'புதைத்து' வைத்த கொடூரம்.. 'ஒன்றரை' ஆண்டுகள் டிமிக்கி கொடுத்த கணவன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாலக்னோவில் ஜலான் மாவட்டத்தில் ஓராய் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் குமார். இவர் ஒன்றரை ஆண்டுக்குகளுக்கு முன் தனது மனைவியைக் கொன்று உடலை ஓராய் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அடக்கம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் இந்த சம்பவம் 2018 மே மாதம் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வினீதாவின் தந்தை கலிச்சரன் போலீசில் புகார் செய்திருந்தார். நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு தற்போது இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கலிச்சரன் தனது மகளோடு 2018 முதல் தொடர்பை இழந்துவிட்டதாகவும், பிரமோத் குமார் மகள் இருக்கும் இடம் குறித்து எந்தவொரு முறையான பதிலும் தரவில்லைஎன்றும் குற்றம் சாட்டினார். ஜலானில் உள்ள ராம்நகர் பகுதியைச் சேர்ந்த பிரமோத் குமார், வினீதாவை 2011 இல் திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர் 2018 ல் டெல்லிக்கு பணியிட மாறுதலாகி சென்றுள்ளார்.
மருமகன் டெல்லியில் இருந்து திரும்பி வந்ததாக கலிச்சரன் சனிக்கிழமை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஓராய் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி சிவ் கோபால் சிங் தெரிவித்தார். விசாரணையின் போது, பிரமோத் குமார் தனது மனைவி எப்படி இறந்தார் என்ற தகவலை முன்னுக்குப்பின் முரணாக மாற்றி பேசியிருக்கிறார். அதன்பின் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
விசாரணையின் போது, குமார் வினீதாவின் உடலை 2018 மே 18 அன்று தனது வீட்டில் புதைத்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அதன் பின்னர் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி வெளியே எடுத்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு அதன் அறிக்கை காத்திருக்கின்றனர்.
கொலை மற்றும் ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டின் பேரில் பிரமோத் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரமோத் குமார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜலான் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.