'யாரும் பக்கத்துல போகாதீங்க...' 'கொரோனா வந்திடும்...' 'சாலையில் கிடந்த பணம்...' கொரோனாவால ஆட்டோக்காரருக்கு லக்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆட்டோ ஓட்டுநர் தவறவிட்டு, சாலையில் கிடந்த ரூ.20,500 பணத்தை கொரோனா தொற்று பணமாக இருக்குமோ என போலீசாரை அழைத்து ஒப்படைத்த சம்பவம் ஆட்டோ ஓட்டுநருக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஆட்டோ ஓட்டுநரான கஜேந்திர ஷா பீகார் மாநிலம், சஹார்ஷா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நேற்று தனது இரண்டு மாத சம்பள பணமான ரூ.25,000-ஐ கடைக்கு எடுத்து சென்றுள்ளார். போகும் வழியில் பாக்கெட்டில் கைவிட்டு வேறு பொருளை எடுக்கும் போது, கஜேந்திர் சிங் சட்டைப்பையில் இருந்த பணத்தில் ரூ.20.500 சாலையில் விழுந்துள்ளது. இதை அறியாத கஜேந்திரஷா சிறிது தூரம் கடந்து கடைக்கு சென்று பொருட்களை வாங்கிய பின் தான், தன்னிடம் இருந்த பணம் காணாமல் போயுள்ளதை உணர்ந்துள்ளார்.
பிறகு பதறியடித்து கொண்டு வந்த வழியெல்லாம் தேடியுள்ளார், ஆனால் பணம் கிடைத்த பாடில்லை. தனது இரு மாத சம்பளத்தை தொலைத்த கவலையுடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில்தான் ஓட்டுநர் கஜேந்திரஷாக்கு ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது. அவர் சென்ற வழியில் சாலையில் இருந்த ரூ.20,500 பணத்தை போலீசார் மீட்டதாக அக்கம் பக்கத்தினர் மூலம் கஜேந்திர ஷாவிற்கு தெரியவந்துள்ளது.
உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று, போலீசாருக்கு கிடைத்த தனது பணம் தான் என ஆட்டோ ஓட்டுநர் கஜேந்திரஷா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கஜேந்திரஷாவின் பணத்தை போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து கூறிய போலீசார், இந்த கொரோனா வைரஸ் பரவி வரும் அச்சத்தால் சாலையில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லை, மேலும் சமீபகாலமாக ரூபாய் நோட்டுகள் மூலமும் கொரோனா பரவும் என செய்திகள் பொதுமக்களிடையே பரவிவருகிறது. இதனால் சாலையில் கிடந்த இந்த பணம் கொரோனா தொற்று உடையவரையதாக கூட இருக்கலாம், அதன் மூலம் அவர்களுக்கும் கொரோனா வந்துவிடும் என்ற அச்சத்தில் பணம் கீழே இருப்பதை பார்த்த மக்கள் எவருமே அந்த பண்ணத்தை எடுக்கவில்லை. அதன் அருகில் கூட செல்லாம் தங்களுக்கு தகவல் அளித்ததாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பல தீமைகளையும், துன்பங்களையும் மக்களுக்கு அளித்தாலும் ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கும் ஆட்டோ ஓட்டுனரின் பணம் கிடைக்க உதவி புரிந்துள்ளது என சொல்லலாம்.