'12 வயசுல ஆசைப்பட்டேன்...' ஆனா 67 வயசுல தான் 'என் லட்சியம்' நிறைவேறியிருக்கு...! - 50 வருசமா உள்ளுக்குள்ள எரிந்துக்கொண்டிருந்த கனவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபடிப்பிற்கு வயது என்பது தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளார் டாக்டர் பட்டம் வாங்கிய 67 வயது உஷா.
மும்பையை சேர்ந்த 67 வயது உஷா பாட்டிக்கு 12 வயதிலேயே மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததுள்ளது. ஆனால் அவருக்கு 16 வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கல்லூரி செல்லும் போது பாதியிலேயே திருமணம் நடந்து, குழந்தை குட்டிகள் கணவன் என கனவுகளை கடந்து சாதாரண குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து கூறிய உஷா, 'சிறு வயதிலேயே திருமணம் நடந்ததால் என்னால் என் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. அதன்பின்னும் குடும்பத்தை கவனித்ததால் படிக்க முடியவில்லை.
வருடங்கள் போக போக என்னுடைய பொறுப்புகள் குறைந்தபிறகு மீண்டும் கல்வியைத் தொடர விரும்பி 9 ஆண்டுகளுக்கு முன் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தேன்.
அதோடு என்னுடைய குருவும் ஜெயின் அறிஞருமான ஜெயதர்ஷிதாஸ்ரீஜி மகராஜ் மூலம் ஈர்க்கப்பட்டு, ஆன்லைனிலேயே மகாராஷ்டிராவில் உள்ள கல்லூரியில் ஜெயின் மதத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றேன். அதிலேயே முதுகலைப் பட்டமும் பெற்றேன்.
3 ஆண்டுகளுக்கு முன் மும்பை கல்லுாரிப் பேராசிரியரின் வழிகாட்டுதலின்படி, மகாராஷ்டிராவில் உள்ள ஷத்ருஞ்சய் அகாடமியில் முனைவர் ஆய்வுப் படிப்புக்குப் பதிவு செய்தேன். 'மதம் போதித்த சமாதானக் கொள்கைகள்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டேன்.
கொரோனா காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு நடுவிலும் தற்போது ஆய்வை முடித்துள்ளேன்.
ஆனால் தற்போது முனைவர் பட்டம் பெற்று, 50 வருடங்கள் கழித்து என் கனவை நிறைவேற்றி உள்ளேன். வருங்காலத்தில் மாணவர்களுக்குக் கற்பிக்க விரும்புகிறேன்' என்று உஷா லோதயா தெரிவித்தார்.
மற்ற செய்திகள்