'மும்பையில்' இனி 24 மணி நேரமும் 'கடைகள்' திறந்திருக்கும்... சார் எங்க ஊர்ல எப்ப சார் கடையை திறப்பீங்க...? 'சென்னை' மக்கள் ஏக்கம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கும் இரவு வாழ்க்கை திட்டம் மும்பையில் அமலுக்கு வந்தது.

'மும்பையில்' இனி 24 மணி நேரமும் 'கடைகள்' திறந்திருக்கும்... சார் எங்க ஊர்ல எப்ப சார் கடையை திறப்பீங்க...? 'சென்னை' மக்கள் ஏக்கம்...

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ஆதித்ய தாக்கரே கடந்த பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியின் போதே மும்பையில் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அப்போது அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

தற்போது  மஹாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு சமீபத்தில் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  இதையடுத்து குடியரசு தினமான நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றும் நிறுவனங்கள் மட்டுமே இரவு திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் சென்னையில் எப்பொழுது அமல்படுத்தப்படும் என மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

MUMBAI, MAHARASHTRA, ADITYA THACKERAY, UDDHAV THACKERAY