இனி பண்டிகைகளில் தெலுங்கு மொழி படங்களுக்கே திரையரங்கில் முன்னுரிமை.. தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடி !
முகப்பு > செய்திகள் > இந்தியாவால்டேர் வீரய்யா, வீர சிம்ம ரெட்டி, வாரிசு மற்றும் துணிவு ஆகிய 4 பெரிய படங்கள் 2023 சங்கராந்திக்கு தெலுங்கு மாநிலங்களில் வெளியாக உள்ளன.
வரும் சங்கராந்திக்கு ரிலீஸ் ஆக உள்ள படங்களுக்கு தியேட்டர் பங்கீடு குறித்த செய்திக் குறிப்பை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.
தெலுங்கு மாநிலங்களில் தெலுங்கு நேரடி படங்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், தியேட்டர்கள் இருந்தால், அவை டப்பிங் படங்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் கவுன்சில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கையில், "தெலுங்குப் படங்களின் தயாரிப்புச் செலவு அதிகரிப்பு, தயாரிப்பாளர்களின் நலன், தெலுங்குத் திரைப்படத் துறையைக் காப்பாற்றுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 08.12.2017 அன்று நடைபெற்ற தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டத்தில் “தெலுங்கு நேரடிப் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் எடுக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கராந்தி மற்றும் தசரா பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
இது தொடர்பாக, பிரபல தயாரிப்பாளரும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தற்போதைய துணைத் தலைவருமான ஸ்ரீ தில்ராஜு, 2019 ஆம் ஆண்டு ஊடகங்கள் மூலம், "பண்டிகைக் காலங்களில் டப்பிங் செய்யப்பட்ட தெலுங்குப் படங்களுக்கு எப்படி தியேட்டர்களை வழங்குவது என்றும், அதனால் முதல் முன்னுரிமை தெலுங்கு படங்களுக்கு அளிக்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பண்டிகை நாட்களில் திரையரங்குகளில் திரையிடுவதற்காக நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பண்டிகைகளின் போது மீதமுள்ள திரையரங்குகளில் டப்பிங் செய்யப்பட்ட தெலுங்கு திரைப்படங்களுக்கு வழங்கப்படும்.
எனவே, "சங்கராந்தி மற்றும் தசரா பண்டிகைகளின் போது நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து திரையரங்குகளில் திரையிட வேண்டும், மீதமுள்ளவை டப்பிங் தெலுங்கு படங்களுக்கு வழங்கலாம்" என்ற இந்த முடிவை தவறாமல் செயல்படுத்துமாறு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது". என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் தில் ராஜு, தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தினை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்