‘ஒரு வீடியோ-க்கே 33.30 மில்லியன் viewers...’ அப்படி என்ன வீடியோ போடுறாங்க...?- யூடியூபை கலக்கும் கங்கவ்வா பாட்டி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

யூடியூப் இளைய சமுதாயதிற்கானது மட்டுமல்ல, அங்கு வயதானவர்களும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் தெலங்கானாவைச் சேர்ந்த கங்கவ்வா பாட்டி.

‘ஒரு வீடியோ-க்கே 33.30 மில்லியன் viewers...’ அப்படி என்ன வீடியோ போடுறாங்க...?- யூடியூபை கலக்கும் கங்கவ்வா பாட்டி...!

தெலங்கானா மாநிலத்தில் பிறந்த கங்கவ்வா பாட்டிக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவர் குடிபழக்கம் உடையவர் என்பதால் சம்பாதிக்கும் பணத்தை குடிப்பதற்கே செலவு செய்துள்ளார். இந்த நிலையில் கங்கவ்வா பாட்டி விவசாய வேலைகள் செய்வது, பீடி தயாரிக்கும் தொழில் செய்து  குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். தன் வாழ்க்கையை குடும்பத்திற்காகவே செலவிட்ட இவருக்கு யூடியூபை அறிமுகப்படுத்தியது மருமகன் ஸ்ரீதர் ஆவார்.

இவர் பாட்டியை வைத்து வீடியோக்கள் தயார் செய்து வெளியிட தொடங்கினார். கிராம வாழ்க்கையை மிகையில்லாமல் அதற்குரிய அழகியலுடன் , அதேசமயம் காமெடி கலந்தும் இவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் பார்வையாளர்களை  வெகுவாகக் கவர்ந்தன. அதிலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக இவர்கள் வெளியிட்ட வீடியோ இதுவரை 3 கோடியே 30 லட்சம் முறைக்கு மேலாக  பார்க்கப்பட்டுள்ளது.

MY VILLAGE SHOW என்னும் இந்த யூடியூப் சேனலை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். டோலிவுட் பிரபலங்கள் கூட தங்களின் சினிமாக்களை இந்த சேனல் மூலம் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 45,000 பேர் இவரை  follow செய்கின்றனர். யூடியூப் சேனல் மூலமாக கிடைக்கும் வருவாயில், கிராமப்  பகுதியில் நூலகம் ஒன்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்து, எந்நேரமும் செல்போனில் மூழ்கி கிடந்தது கற்பனை வறட்சியினால் மந்தை சமூகமாகி வரும் இளைய சமுதாயத்திடம் வாசிப்பு பழக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்