'பயமே எங்கள பாத்தா தெறிச்சு ஓடும்'...'மேடையில் தெறிக்க விட்ட அமைச்சர்கள்'... பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

'பயமா எங்களுக்கா', என்ற ரீதியில் மேடையில் அமைச்சர்கள் செய்த செயல், சமூகவலைதளைங்களில் நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளது.

'பயமே எங்கள பாத்தா தெறிச்சு ஓடும்'...'மேடையில் தெறிக்க விட்ட அமைச்சர்கள்'... பரபரப்பு சம்பவம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் கடைகளில் விற்பனை செய்யப்படும் கோழிக்கறிகள் தான் என, சமூகவலைதளைங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இதன்காரணமாக மக்கள் கோழி கறி சாப்பிடுவதை வெகுவாக நிறுத்தி விட்டார்கள். அதோடு மக்களிடையே ஒருவித அச்சம் தொற்றி கொண்டது. கோழிக்கறியில் கொரோனா வைரஸ் இருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதேபோல் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சத்தை போக்கும் வகையிலும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் தெலுங்கானா மாநிலத்தில் மந்திரிகள் பொது மேடையில் கோழிக்கறியை சாப்பிட்டனர். ஐதராபாத்தின் டாங்க் பந்த் பகுதியில் பிராய்லர் கோழி விற்பனை நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மந்திரிகள் கே.டி.ராமா ராவ், எடிலா ராஜேந்தர், தலசானி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பங்கேற்று கோழி கறியை சாப்பிட்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

அமைச்சர்களின் இந்த செயல் சமூகவலைதளைங்களில் வைரலானது. பலரும் அமைச்சர்களின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

TELANGANA, TELANGANA MINISTERS, CORONAVIRUS, CHICKEN