Childrens Day : சிறுவன் வெச்ச கோரிக்கை.. உடனடியாக ஆக்ஷன் எடுத்த தெலங்கானா அமைச்சர்.. சுவாரஸ்யம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுழந்தைகள் தினம் நேற்று (நவம்பர் 14) கொண்டாடப்பட்டிருந்த நிலையில், பல பள்ளிக் கூடங்களில் இது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
குழந்தைகள் தினம் என்பது பள்ளிக் குழந்தைகள் மத்தியில் மிகவும் ஸ்பெஷலான நாளாக பார்க்கப்படும் நிலையில், அதே தினத்தில் சிறுவன் ஒருவன் வைத்த கோரிக்கையும் அதற்கு தெலங்கானா மாநில அமைச்சர் செய்த உதவி தொடர்பான செய்தியும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் கோல்டன் சிட்டி காலனி பகுதியில் உள்ள சிறுவன் ஒருவன் கையில் பேனருடன் நிற்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. அந்த சிறுவன் வைத்திருக்கும் பலகையில், குழந்தைகள் தினத்தன்று KTR மாமாவுக்கு ஒரு சிறிய விருப்பம் என்பது போல குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தான் வசித்து வரும் ஹைதராபாத் கோல்டன் சிட்டி காலனி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் பிரச்சனை உள்ளதாகவும், இதன் காரணமாக நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும், எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் சிறுவன் அந்த போர்டில் குறிப்பிட்டிருந்தார். ஐந்து ஆண்டுகளாக நிலவி வரும் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க கோரி குழந்தைகள் தினத்தன்று சிறுவன் வைத்த கோரிக்கை தொடர்பான வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
இந்த வீடியோ, தெலங்கானா மாநில நகராட்சி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் கே.டி. ராமராவ் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் தின விழா தினத்தில் சிறுவன் குறிப்பிட்ட பிரச்சனைக்கு தீர்வு காணவும் அமைச்சர் ராமராவ் முடிவு செய்துள்ளார். அதன்படி, இந்த பிரச்சனை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஜல மண்டல் அதிகாரிக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
உத்தரவின் பெயரில், அதிகாரி தாச கிஷோர், ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மழைக் காலமாக இருப்பதால் இந்த நிலை மாறியதும் சிறுவன் தங்கி இருக்கும் பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்வு காணும் வகையில் பைப்லைன் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் தினத்தன்று சிறுவன் கோரிக்கையை ஏற்று அமைச்சர் நடவடிக்கை எடுத்தது தொடர்பான செய்தி, இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
மற்ற செய்திகள்