பரபரப்பு!.. டிப்போவில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா, 23, பிப்ரவரி 2022: தெலுங்கான மாநிலம் செகந்திராபாத் அரசு டிப்போவில் சார்ஜிங் செய்யப்பட்ட மின்சார பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சார்ஜிங் செய்யும்போது தீவிபத்து
தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் டிப்போ அமைத்து, அரசு பேருந்துகளின் பேட்டரிகளுக்கு அங்கு சார்ஜிங் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த் வகையில் ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு பகுதியான செகந்திராபாத் டிப்போவில் தனியாக ஒரு பகுதி அமைத்து அங்கு சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து தீப்பிடித்தது
அவ்வாறு இரண்டு பேருந்துகளின் பேட்டரிகளுக்கு சார்ஜிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது, இதனை பார்த்த ஊழியர்கள் உடனடியாக அருகில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதற்குள்ளாகவே அந்தப் பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
மின்கசிவு காரணமாக
உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் டிப்போவில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது இந்த தீ விபத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தப்பித்தது..
உடனடியாக சார்ஜிங் செய்துகொண்டிருந்த பேருந்து, உடனடியாக அங்கு இருந்து நகர்ந்ததால் தப்பியது இந்த சம்பவத்தில் பெரிய சேதம் எதுவும் இன்றி தப்பித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மற்ற செய்திகள்