ஆன்லைன் கிளாஸ்-க்கு குட்பை...! 'எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது...' 'இந்தியாவிலேயே முதன்முறையாக...' - அதிரடி 'அறிவிப்பை' வெளியிட்ட மாநிலம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாட்டிலேயே முதல் முறையாக ஊரடங்கு விதிகளை முழுவதுமாக ரத்து செய்யப்போவதாகவும், எந்த கட்டுப்பாடுகளும் இனிமேல் கிடையாது எனவும் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் தென் மாநிலங்களின் ஒன்றான தெலுங்கானாவில், கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.
தெலுங்கானாவில், கொரோனா பாதிப்பு விகிதம் 1.14 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு 1400 ஆகவும், உயிரிழப்பு 12 ஆகவும் இருக்கிறது. அதோடு முன்பு விதிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால், நாளை (20-06-2021) முதல் ஊரடங்கு முற்றிலும் நீக்கப்படுவதாகவும், எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
மேலும் தெலுங்கானாவில் ஜூலை 1-ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் கிளாஸ் கிடையாது எனவும், மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு வரும் போது அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இயங்கவும், போக்குவரத்துத்துறை மற்றும் அரசின் இன்னபிற துறைகள் முழுவதுமாக இயங்கவும் தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்