"என் செல்போனை ஒட்டுக்கேக்குறாங்க".. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு.. முழு விவரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தனது செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக சந்தேகிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"என் செல்போனை ஒட்டுக்கேக்குறாங்க".. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு.. முழு விவரம்..!

Also Read | "உங்களுக்கு தான் வெயிட்டிங்"..Finalsல் பாகிஸ்தான்.. இந்திய அணியை குறிப்பிட்டு அக்தர் பகிர்ந்த ட்வீட்!!

கடந்த 2019 ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தின் கவர்னராக தமிழிசை சவுந்தர்ராஜன் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி ராஜினாமா செய்ததை அடுத்து புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் தமிழிசை பொறுப்பு ஏற்றார்.

Telangana Governor Tamilisai doubts that her cellphone trapped

தெலுங்கானாவில் தமிழிசை ஆளுநராக செயல்பட்டு வரும் நிலையில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மேல் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் அவர். தனது செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக தான் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தர்ராஜன், தன்னுடைய தனியுரிமை பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் சில சட்டமன்ற உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைக்க சிலர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தன்னை இணைத்து ஆளுங்கட்சி பேசி வருவதாக ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

Telangana Governor Tamilisai doubts that her cellphone trapped

தெலுங்கானா சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 6 மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், திடீரென செய்தியாளர் சந்திப்புக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார் தமிழிசை. அப்போது பேசிய அவர்,"எனது தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று நான் சந்தேகிக்கிறேன். எனது  தனியுரிமையில் தலையிடுகின்றனர். இரண்டு நாட்கள் முன்பு எனது முன்னாள் பாதுகாவலர் துஷார் தீபாவளி வாழ்த்து சொன்னதிலிருந்து எனது தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுவதாகச் சந்தேகம் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் நிலவுகிறது. தேவையில்லாமல் ஆளுநர் மாளிகையைக் குற்றம் சாட்டி பேசுகின்றனர்" என்றார்.

மேலும், தன்னிடம் மறைக்க ஏதுமில்லை எனவும், போன் ஒட்டுக்கேட்பது குறித்து தான் அச்சம்கொள்ளவில்லை எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் அம்மாநில அரசியல் சூழ்நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Also Read | Ind vs Eng : அரை இறுதி நெருங்கும் நேரத்தில் இங்கிலாந்து அணியில் நடக்க போகும் மாற்றம்??.. பரபரப்பை கிளப்பிய தகவல்

TELANGANA, TELANGANA GOVERNOR, TELANGANA GOVERNOR TAMILISAI, CELLPHONE

மற்ற செய்திகள்