"நிறுத்துங்க!".. சினிமாவை மிஞ்சும் ‘மணமேடை’ ட்விஸ்ட்! போதையில் வந்த காதலன்.. மனம் திறந்த மணப்பெண்!.. எல்லாம் முடிந்து மணமகன் வைத்த பகீர் புகார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவின் கரீம் நகரைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும் திவ்யா என்கிற மணப்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்னர் திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மணப்பெண்ணுக்கு மணமகன் தாலி கட்ட தயாரான நிலையில் அங்கு திடீரென வந்த வம்சி என்கிற இளைஞன் குடிபோதையில் வந்ததுடன் திவ்யாவை தன் காதலித்ததாகவும், திவ்யாவும் தன்னை காதலித்ததாகவும் கூறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதைக்கேட்ட பிரவீன் குமார் உள்ளிட்ட அனைவருமே அதிர்ந்துள்ளனர். மேலும் திவ்யாவும் அந்த இளைஞனுடன் கிளம்பி செல்வதற்கு தயாரானார் என்பதுதான் இதில் இருக்கும் கூடுதல் தகவல். இதுகுறித்து போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் மணமகன் மற்றும் மணப்பெண் மற்றும் வம்சி என மூவரையும் விசாரித்தபோது மணப்பெண் திவ்யா, தான் வம்சியை காதலித்ததாகவும் அவருடன் செல்லவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படி எல்லாம் முடிந்தபின், கடைசியாக பிரவீன்குமார் போலீசாரிடம், “வம்சி என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்” என்று புகார் அளித்துள்ளார். இதனால் மணப்பெண் திவ்யா காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், மீண்டும் வம்சி மற்றும் பிரவீன்குமார் இருவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். திரைப்பட பாணியில் நடந்த இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்