'பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி...' 'தேர்வு எழுத தேவையில்லை...' தேர்வை ரத்து செய்த மாநிலம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதா என்ற குழப்பமான சூழல் நிலவி வரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

'பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி...' 'தேர்வு எழுத தேவையில்லை...' தேர்வை ரத்து செய்த மாநிலம்...!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதால் கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி முதல் இன்று வரை பொது ஊரடங்கு ஒரு சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. இதுநாள் வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுமா இல்லையா என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருக்கிறது.

பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் எனலாம். தமிழகத்தில் ஊரடங்கு நேரத்திலும் 12-ம் வகுப்பின் விடுபட்ட பாடங்களை தமிழக அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த உள்ளதாக அறிவித்ததில் இருந்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இது போன்று தேர்வு நடத்த வேண்டாம் என பல்வேறு தரப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இன்று நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெலங்கானா அரசு தங்கள் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுதவிருக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்வின்றி தேர்ச்சி அடைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற செய்திகள்