'மகளே, கோடிக்கணக்கான இதயம் உனக்காக துடிக்கிறது'... 'வெண்டிலேட்டரில் இருக்கும் டீரா'... '16 கோடி ரூபாய் ஊசி தயார்'... அடுத்து என்ன நடக்கும்?
முகப்பு > செய்திகள் > இந்தியா16 கோடி ரூபாய் ஊசிக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அது இந்தியா வருவதற்கு சில நடைமுறைகள் உள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஐந்து மாத குழந்தை டீரா காமத் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் மருத்துவச் சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி ஒன்று தேவைப்பட்ட நிலையில் சமூகவலைத்தளங்கள் மூலமாக இந்த செய்தி நாடுமுழுவதும் சென்றடைந்த நிலையில், பலரும் குழந்தை டீராவுக்கு உதவி செய்தனர். இந்நிலையில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு ரத்து செய்தது.
இந்நிலையில் மருந்துக்கான வரிகளை ரத்து செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, மத்திய சுகாதாரத் துறையின் கவனத்தைப் பெற உதவிய மகராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டீராவின் சார்பாகப் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதிய தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியொருக்கு நன்றிகள்," என டீராவின் பெற்றோர் பதிவிட்டுள்ளார்கள்.
இதற்கிடையே மருந்துக்கான வரி விலக்கு கிடைத்துவிட்ட நிலையில் டீராவின் பெற்றோர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை அணுகியுள்ளனர். ஆனால் அந்த மருந்திற்கு இந்தியாவில் அனுமதி இல்லை என்பது தான் முக்கியமான ஒன்றாகும். இதனால் அதை இறக்குமதி செய்வதற்கு சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
அந்த வகையில் இந்த உயிரிக்காக்கும் மருந்து தனிநபர் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என அந்நிறுவனம் குறிப்பிடும். எனவே அனைத்து நடைமுறைகளும் முடிந்தபின் மருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும். வரி விலக்கைப் பெற்றுள்ள தீராவின் பெற்றோர் விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று அந்த மருந்தைப் பெற வேண்டும்.
இந்த நடைமுறைகள் அனைத்திற்கும் கிட்டதட்ட ஒரு வார காலம் பிடிக்கும் என தெரிகிறது. இதனிடையே 15 நாட்களுக்கு முன் நுரையீரலில் ஒன்று செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டீரா தற்போது வெண்டிலேட்டரின் உதவியுடன் சுவாசித்து வருகிறார்.
உனக்காகப் பல கோடி பேர் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்கள், சீக்கிரம் எழுந்து வா டீரா.
மற்ற செய்திகள்