'குறைஞ்ச விலையில கொரோனா டெஸ்ட் பண்ணிக்கலாம்!'.. புழக்கத்துக்கு வரும் புதிய கருவி இதுதான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடாடா நிறுவனத்தின் மிகக் குறைந்த செலவிலான கொரோனா பரிசோதனைக் கருவி வர்த்தக ரீதியாக புழக்கத்துக்கு வருகிறது.
ஃபெலூடா சோதனைக் கருவி எனப்படும் டாடா நிறுவனத்தின் இந்த கொரோனா சோதனைக் கருவியை வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதற்கு அதன் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
கொரோனா வைரஸின் மரபணு வரிசையைக் கண்டறிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருவியின் விலை 500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கருவியில் மரபணு பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்டு நோய்த்தொற்றை கண்டறியும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
மற்ற செய்திகள்