'இந்த காலேஜ் பசங்கள வேலைக்கு சேர்க்க கூடாது'... 'ரத்தன் டாடா அப்படி சொன்னாரா'?... வைரலாகும் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை பணியமர்த்த மாட்டோம் என கூறி, அதற்காக அவர் ஒரு காரணமும் கூறியதாக சமூகவலைத்தளங்களில் ட்வீட் ஒன்று வைரலானது. அதுகுறித்து தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

'இந்த காலேஜ் பசங்கள வேலைக்கு சேர்க்க கூடாது'... 'ரத்தன் டாடா அப்படி சொன்னாரா'?... வைரலாகும் ட்வீட்!

டாடா குழும தலைவர் ரத்தன் டாடா ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை டாடா குழுமத்தில் பணியமர்த்த மாட்டோம் என தெரிவித்ததாக, சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. அந்த ட்விட்டில் "ரத்தன் டாடா சாஹப்-இன் மிகப்பெரிய அறிவிப்பு: "இனி டாடா குழும நிறுவனங்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த எந்த மாணவரையும் பணியில் சேர்க்காது. நாட்டிற்கு விசுவாசமில்லாதவர்கள், எப்படி நிறுவனத்திற்கு விசுவாசமாக இருப்பர் என நம்ப முடியும்?." என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனிடையே இது குறித்து விளக்கமளித்துள்ள டாடா நிறுவன அதிகாரி ஒருவர், ''ரத்தன் டாடா இதுபோன்ற தகவலை கூறவில்லை. இது முற்றிலும் உண்மையில்லை'' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் இணைத்து ரத்தன் டாடா கூறிய கருத்துக்கள் என தகவல்கள் வைரலாகி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போதைய தகவல் புதிய போராட்டத்துடன் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை தன்மையை அறியாமல் இதுபோன்று பரப்பப்படும் போலியான தகவல்கள் எந்த அளவிற்கு தனி நபரையோ அல்லது நிறுவனத்தையோ தர்மசங்கடமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதற்கு இதுவே பெரிய உதாரணம்.

TWITTER, TATA, RATAN TATA, FAKE QUOTE, JNU