32 மணி நேரத்தில்.. 1857 கிலோ மீட்டர்.. காசி வரை பயணம் செய்து திரும்பி பாக்க வெச்ச தமிழக தம்பதி!!.. சுவாரஸ்ய பின்னணி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

32 மணி நேரத்தில்.. 1857 கிலோ மீட்டர்.. காசி வரை பயணம் செய்து திரும்பி பாக்க வெச்ச தமிழக தம்பதி!!.. சுவாரஸ்ய பின்னணி

Also Read | விரைவில் கே எல் ராகுலுக்கு திருமணம்?.. வெளியான அசத்தல் தகவல்.. வைரல் ஆக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!!

அதன் ஒரு பகுதியாக, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒரு மாதம் நடைபெறுகிறது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் வைத்து கடந்த மாதம் 19 ஆம் தேதி நடந்த தொடக்க விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்திருந்தார். டிசம்பர் 16ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TamilNadu couple travels 1857 kilometers in bike to attend kasi sangam

அப்படி ஒரு சூழ்நிலையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர் செய்துள்ள சாதனை தொடர்பான செய்தி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கடந்த ஒரு வருடமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளை இருசக்கர மோட்டார் வாகனத்தில் பார்வையிட்டு வரும் தம்பதியர் தான் ஓசூரை சேர்ந்த ராமலட்சுமி மற்றும் ராஜன். இவர்கள் நேபாளம் செல்ல திட்டமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள காசி தமிழ் சங்கமத்தை காண வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ளனர்.

அப்படி ஒரு சூழலில், ஓசூரில் இருந்து வாரணாசிக்கு இரு சக்கர மோட்டார் வாகனத்திலும் பயணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். ஓசூரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த அவர்கள் இருவரும் இடையில் உணவுக்காகவும், எரிபொருளுக்காகவும் செலவிட்ட நேரத்தை சேர்த்து, சரியாக 32 மணி நேரத்தில் 1857 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து காசிக்கும் வந்து சேர்த்துள்ளனர் ராமலட்சுமி மற்றும் ராஜன் தம்பதியர்.

TamilNadu couple travels 1857 kilometers in bike to attend kasi sangam

இந்த பயணம் தங்களின் திருப்திக்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் என்றும் சாதனை புத்தகத்தில் பதிவதற்காக அல்ல என்றும் ராமலட்சுமி மற்றும் ராஜன் ஆகியோர் கூறியுள்ளனர். அதே போல, காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள உறவு குறித்து தமிழகத்தில் இருக்கும் போது கூட தங்களால் இத்தனை விஷயங்களை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றும் இங்கே நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்வை காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read | வர்ணனையில் ஈடுபட்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீர் நெஞ்சு வலியா?.. வெளியான தகவலால் பரபரப்பான கிரிக்கெட் வட்டாரம்!!

TRAVELS, TAMILNADU COUPLE, BIKE, KASI SANGAMAM

மற்ற செய்திகள்