இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. பெட்ரோல் ஹோம் டெலிவரி செய்யும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!

2. பிகில் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என, தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

3. தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

4. கார் பதிவெண்ணில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரை எழுதிய  இளைஞர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

5. தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் என,  போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

6. பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்படும். பிஎஸ்என்எல்-லில் விருப்ப ஓய்வு (VRS) பெறுவோருக்கு சிறப்பு ஓய்வூதிய தொகுப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

7. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த சாக்லேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ சாக்லேட்டின் விலை 4.3 லட்ச ரூபாய் ஆகும்.

8. பேனர் விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ  உயிரிழப்புக்கு ரூ.1கோடி இழப்பீடு கோரி அவரது தந்தை ரவி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

9. காற்றின் தரம் மிக மோசமாக உள்ள இந்திய நகரங்களில் வாரணாசி முதலிடம் பிடித்துள்ளது.

10. அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததால் சிறப்புக்காட்சியை ரத்து செய்தோம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.