இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக கழிவறைகளை பராமரிக்க வேண்டும் என, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை.

இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

2. நீர்வள மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.649 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. உலக வங்கி நிதியுதவியுடன் தமிழகத்தில் நீர்வள மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

3. உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். சோதனை முறையில் மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

4. மகாராஷ்டிராவில் சாகுபடி பாதித்த விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யவும், உடனடி உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்கும் வகையில் பயிர்க்காப்பீடு திட்டமும் திருத்தப்படும் என்று மகாராஷ்டிராவில் குறைந்தபட்ச செயல்திட்டத்தை சிவசேனா கூட்டணி வெளியிட்டு உள்ளது.

5. எல்லோரையும் போல தோல்வியால் நானும் அவதிப்படுவேன் என இந்திய கேப்டனும் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான விராட் கோலி தெரிவித்து உள்ளார்.

6. அல்பேனியா நாட்டில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

7. 21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி 158-151 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் யி ஹசுன் சென்-சிக் லுக் சென் இணையை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றது.

8. பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9. பள்ளிகளில் காலையில் வழிபாட்டு கூட்டத்துக்கு முன்பு 15 நிமிடங்கள் மாணவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10. தமிழகத்தில், 5 மற்றும் 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

11. காங்கோ நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கின்ஷாசா அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

12. மேற்குவங்கத்தின் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

13. தமிழகத்தில் நாளை இரவு தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.