இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. LED டிவி பேனல்களுக்கான 5% இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் டிவி விலை கடுமையாகக் குறையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!

2. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் 72 ரன்கள் விளாசியதன் மூலம் 2441 ரன்களுடன் விராட் கோலி டி20 போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருந்த ரோஹித் ஷர்மா 12 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 2434 ரன்களுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

3. புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் அபராதத்தின் அளவைக் குறைப்பது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

4. சென்னையில் நள்ளிரவில் தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

5. மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் மின்சார பாதிப்பு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் 26 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

6. காரைக்காலில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்திய கடலோரக் காவல்துறை தலைமைக் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7. சென்னை நங்கநல்லூரில் மின்கம்பி அறுந்து விழுந்து உதயகுமார் என்பவருக்கு சொந்தமான கார் மற்றும் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.

8. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றக் காவலை அக்டோபர் 3ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

9. சென்னையில் மீண்டும் ரூட்டு தல யார் என்பதில் பிரச்சனை ஏற்பட்டு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநில கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் சிலர் ரூட்டு தல பிரச்சனையில் கடற்கரை சந்திப்பிலிருந்து அரக்கோணம் செல்லும் ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து நிறுத்தி ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டுள்ளனர்.

10. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எல்சிஏ தேஜாஸ் இலகுரக போர் விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பறந்துள்ளார். இதன்மூலம் தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

11. ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகியுள்ளனர். 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

12.  மதுரை கோட்டத்தில் இருப்புப்பாதை தொடர்புடைய பணியிடங்களுக்கான தேர்வில் 90 சதவிகித இடங்களுக்கு வட மாநிலத்தவர் தேர்வாகியுள்ளனர். அடுத்தபடியாக கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் தேர்வாகியுள்ளனர். 572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் 20க்கும் குறைவானவர்களே தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

13. உலக சாம்பியன் பி.வி.சிந்து சீனா ஓபன் பாட்மிண்டனில் த்ரில் ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவி சோச்சுவாங்கிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

INDIA, TAMILNADU, VIRATKOHLI, ROHITSHARMA, HEAVYRAIN, STALIN, ROUTETHALA, NEET, AMITSHAH, CAR, BIKE, FIRE, GIRL, KIDNAP, LIGHTNING, SCHOOL, STUDENTS