இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய முக்கியச் செய்திகள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. செய்திகள் பின்வருமாறு:-

இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

1. தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்ற முதல்வர் பழனிசாமி இன்று அதிகாலை வெளிநாட்டில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.

2. ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசத்தின் சம்பா எல்லைப் பகுதியில் நேற்று இரவு 9.27 மணிக்கு ரிக்டர் அளவில் 3.2 அளவிலான நிலநடுக்கம் உண்டானது.

3. சிறுபான்மை கல்லூரியில் காலியாக உள்ள, ஆசிரியர் பணிகளை நிரப்ப, விளம்பரங்கள் வெளியிட வேண்டாம் என்றும், கோவை சிறுபான்மை கல்லூரியில் அமர்த்தப்பட்ட 7 பேரின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் தர மறுத்த இயக்குனரின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

4. ரயில்வே துறை சார்ந்த தேர்வான ஜிடிசிஇ தேர்வை, தமிழ் உள்ளிட்ட எந்த மாநில மொழிகளிலும் எழுதலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

5. மொகரம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பாகிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6. புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு நாளை புவிசார் குறியீடு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகிள்ளன.

7. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது அமர்வுக்கான வழக்கு பட்டியல் இன்று வெளியிடப்படவில்லை.

8. புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை என்றும் எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டுதான் இருப்பதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

9.இரண்டு வாரங்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று தெலுங்கானா மக்களுடன் உரையாடவுள்ளதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். 

10.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் 370-ஐ நீக்குவது, ஜனசங்க காலம் முதல் எங்களது கொள்கையாக இருந்து வந்ததுதான் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.