இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு வெளியிட்டதற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

2. 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 90 கோடி பேர் இண்டெர்நெட் பயன்படுத்துவார்கள் என ஐ.டி மற்றும் நெட்வொர்க் நிறுவனமான சிஸ்கோ கணித்துள்ளது.

3. அடுத்த 3 ஆண்டுகளுக்கு டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

4. சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. 2 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

5. சீனா செல்ல உள்ள இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானத்தில் மருந்துகளும் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

6. அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏழு அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு வசித்துவரும் மக்களை காலி செய்யவும் அகமதாபாத் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.

7. டெல்லி முதல்வராக பதவியேற்ற நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். சந்திப்பின்போது போதிய நிதி, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கெஜ்ரிவால் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

8. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

9. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும், குரூப்-1 (Combined Civil Service Examination-I) தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது.

10. ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரையிலான ஒரு மாதத்தில் மட்டுமே, தமிழகத்தில் 132 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11. பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும்போது ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.