'நாங்க இத முடிச்சு தரோம்'... 'தாலிபான்கள் கொடுத்துள்ள அதிரவைக்கும் வாக்குறுதி'... 'டிவியில் உளறி கொட்டிய பாகிஸ்தான் தலைவர்'... அதிர்ச்சியில் இந்தியா!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்குத் தாலிபான்கள் கொடுத்துள்ள ரகசிய வாக்குறுதி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்தது என்ன நடக்குமோ என்பதே பல உலக நாடுகளின் கவலையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தாலிபான்களுக்குப் பாகிஸ்தான் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இதற்கிடையே இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் தாலிபான்களைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது அந்த குற்றச்சாட்டு உண்மை தானோ என்று உறுதிப் படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தாலிபான்களுக்குப் பாகிஸ்தானை ஆளும் இம்ரான்கான் அரசு மறைமுகமாக உதவி வருவதாக ஏற்கனவே தாலிபான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில் காஷ்மீரை ஆக்கிரமிக்க இம்ரான்கான் அரசு தாலிபான் அமைப்பின் உதவியை நாடுவதாக இம்ரான்கான் கட்சியின் கூட்டணிக் கட்சியான பாகிஸ்தான் தேகிரீக் இன்சாஃப் கட்சியின் தலைவர் நீலம் இர்ஷாத் ஷேக் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளது, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய நீலம், காஷ்மீரை முழுவதுமாக அடையத் தாலிபான்கள் உதவுவதாக இம்ரான்கானுக்கு வாக்களித்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நீங்கள் சொன்ன இந்த செய்தி கண்டிப்பாக இந்திய அரசைச் சென்று சேர வேண்டும் என்று அவர் கூறினார்.
ஆனால் நிகழ்ச்சி தொகுப்பாளரின் அதிர்ச்சியைப் பொருட்படுத்தாத, நீலம், ''தாலிபான் பாகிஸ்தான் ஆகிய இரண்டுமே இரு வேறு விதமாக பாதிக்கப்பட்டபட்டவை என்பதால் காஷ்மீரை ஆக்கிரமிக்கத் தாலிபான் உதவுகிறது என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் ஓர் கட்சித் தலைவர் இவ்வாறு தொலைக்காட்சியில் வெளிப்படையாகப் பேட்டி அளித்ததை அடுத்து இம்ரான்கான் அரசு தாலிபான்கள் உடன் ரகசிய தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே காஷ்மீர் மாநிலத்தில் தாலிபான்களின் உதவியுடன் பாகிஸ்தான் அரசு அத்துமீறும் சம்பவங்களின் ஈடுபட வாய்ப்பிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
#PTI leader Neelam Irshad Sheikh: Taliban have announced that they will join hands with Pakistan to liberate Kashmir. pic.twitter.com/MfC7mQ6lLh
— SAMRI (@SAMRIReports) August 23, 2021
மற்ற செய்திகள்