94% மதிப்பெண்களுடன் கலங்கி, தவித்த ஏழை 'மாணவி'க்கு... பார்சலில் வந்த 'சர்ப்ரைஸ்'... பிரபல நடிகை அளித்த 'சூப்பர்' கிஃப்ட்
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் ஆன்லைன் கிளாஸ்கள் வழியாக மாணவ, மாணவிகள் படிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைன் கிளாஸ்க்கு மொபைல் போன் இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். பி.யூ.சி தேர்வில் 94% மதிப்பெண்கள் பெற்ற அந்த மாணவிக்கு படித்து டாக்டர் ஆவது தான் லட்சியம்.
ஏற்கனவே வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களை விற்று அவரது தந்தை படிக்க வைத்து இருப்பதால் மொபைல் போன் வாங்க வழியின்றி தவித்திருக்கிறார். இந்த சம்பவம் மீடியா வெளிச்சத்துக்கு வர, இதைப்பார்த்த நடிகை டாப்ஸி பன்னு அவருக்கு ஐபோன் ஒன்றை பரிசாக வாங்கி அனுப்பி வைத்துள்ளார். இந்த மொபைலை பார்த்த மாணவி அதிர்ச்சியில் திக்குமுக்காடி போய் விட்டார்.
இதுகுறித்து அந்த மாணவி, ''டாப்ஸி மேடம் அனுப்பிய போன் எனக்கு கிடைத்தது. அது ஐபோன் என்னால் நம்பவே முடியவில்லை. இது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. நான் கடினமாக உழைத்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முயற்சிப்பேன். உங்களது ஆசிர்வாதம் எனக்கு தேவை,'' என தெரிவித்து இருக்கிறார்.
இந்த சர்ப்ரைஸ் குறித்து நடிகை டாப்ஸி, ''அதிக அளவு பெண்கள் படிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும். நமக்கு அதிக மருத்துவர்கள் தேவை. நமது நாட்டிற்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய ஒரு சிறிய பங்களிப்பு இது,'' என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். டாப்ஸியின் இந்த செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்