கிஃப்டா கொடுத்த ஐபோன் தான் இந்த கேஸ்-ஐ மாத்திடுச்சு.. நான் சுயசரிதை எழுதினா பலரோட முகமூடி கிழியும்.. ஸ்வப்னா சுரேஷ் பதிலடி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளா: நான் சுயசரிதை எழுதினால், சிவசங்கரின் சுயசரிதையில் இருப்பதை விட பல தகவல்களை தெரிவிக்க முடியும் என்று ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கிஃப்டா கொடுத்த ஐபோன் தான் இந்த கேஸ்-ஐ மாத்திடுச்சு.. நான் சுயசரிதை எழுதினா பலரோட முகமூடி கிழியும்.. ஸ்வப்னா சுரேஷ் பதிலடி

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்டு :

கேரளாவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தங்க கடத்தல் வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் மற்றும் இங்கு பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை அமலாக்க துறையும் விசாரிக்க தொடங்கியதை தொடர்ந்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக பணிபுரிந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரும் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

சுயசரிதை புத்தகம்:

அதன்பிறகு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சிவசங்கரின் சஸ்பெண்டு உத்தரவு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இப்போது அவர் கேரள விளையாட்டு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிவசங்கர் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது. அந்த புத்தகத்தின் சில பகுதிகள் அண்மையில் வெளியானது. அந்த புத்தகத்தில் ஸ்வப்னா பற்றி பல தகவல்களை சிவசங்கர் கூறியுள்ளார்.

Swapna Suresh retaliates against Shiva Shankar's Biography

மிகப்பெரிய துரோகம்:

அந்த பகுதிகளில், ஸ்வப்னாவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். மூன்று ஆண்டுகளாக பழகியுள்ளேன். தங்க கடத்தல் வழக்கில் சிக்கியதன் மூலம் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டார். அவர் எனக்கு துரோகம் செய்வார் என நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. மேலும் அவர் எனக்கு அன்பளிப்பாக தந்த ஐபோன், இந்த வழக்கின் போக்கையே மாற்றிவிட்டது. மேலும் இந்த வழக்கு எனக்கு எதிராகவும் திசை திருப்பப்பட்டது, என்று அதில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் முக்கிய பங்கு:

இந்நிலையில் சிவசங்கர் கூறிய தகவல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்வப்னா சுரேசும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, "சிவசங்கருக்கும் எனக்கும் மிக நெருங்கிய நட்பு இருந்தது. மூன்று ஆண்டுகளாக அவர் எனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தார். ஒரு நாள் விட்டு ஒருநாள் என் வீட்டுக்கு தவறாமல் வருவார். ஒவ்வொரு மாதமும் பல வெளியூர்களுக்கு ஒன்றாக வெளியே செல்வோம்.

நான் ஏன் ஒரு ஐபோனை கொடுக்க வேண்டும்?

மாதம் இரண்டு முறையாவது சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருவோம். இருவரும் பல வெளிநாடுகளுக்கும் ஒன்றாக சென்றுள்ளோம். அப்படி இருக்கும்போது அவரை கைக்குள் போட நான் ஏன் ஒரு ஐபோனை கொடுக்க வேண்டும்? அவர் கூறியதாலேயே எனக்கு அரசு பணி கிடைத்தது. சிவசங்கர் மூலம் பல முக்கிய மனிதர்களின் தொடர்பு கிடைத்தது. கேரள முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனையும் எனக்கு நன்றாக தெரியும். அவரது வீட்டிற்கு நான் பலமுறை சென்றுள்ளேன். அவரும் என் வீட்டிற்கு பலமுறை வந்து போயுள்ளார்.

சிவசங்கர் இப்போது என் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க நினைக்கிறார். நானும் சுயசரிதை எழுதினால், சிவசங்கரின் சுயசரிதையில் இருப்பதை காட்டிலும் பல தகவல்களை கூற முடியும். அப்போது பல பேரின் முகமூடிகள் கிழியும்" என்று ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்

SWAPNA SURESH, SHIVA SHANKAR, BIOGRAPHY, ஸ்வப்னா சுரேஷ், சிவ சங்கர், சுயசரிதை

மற்ற செய்திகள்