‘விண்வெளி ரகசியங்களை...’ ‘வெளிநாடுகளுக்கு வியாபாரம் செய்ததாக...’ - சொப்னா மீது பரபரப்பு குற்றசாட்டு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சொப்னாவுக்கு, கேரள அரசும், ஐஎஸ்ஆர்ஓ-வும் இணைந்து நடத்தும் விண்வெளி பூங்கா திட்டத்தில் மேலாளராக பணி கிடைத்தது.

‘விண்வெளி ரகசியங்களை...’ ‘வெளிநாடுகளுக்கு வியாபாரம் செய்ததாக...’ - சொப்னா மீது பரபரப்பு குற்றசாட்டு...!

அந்த நேரத்தில் ஐடி துறை செயலாளராக சிவசங்கர் இருந்துள்ளார். இந்நிலையில், சொப்னாவும், சிவசங்கரும் சேர்ந்து விண்வெளி ஆய்வு மைய ரகசியங்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக, மலையாளத்தில் வெளிவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் பத்திரிகையில் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் விண்வெளி பூங்கா திட்டத்துக்காக கேரள அரசும், ஐஎஸ்ஆர்ஓவும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

இதில் கேரள அரசு சார்பில் சிவசங்கர் கையெழுத்திட்டார். அதன் பின்னர்தான் அவர் சொப்னாவை விண்வெளி பூங்கா உயர் பதவியில் நியமித்தார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி பெங்களூருவில் உள்ள ஐஎஸ்ஆர்ஓ தலைமை அலுவலகம் சென்று வந்துள்ளனர். அப்போது விண்வெளி ஆய்வு குறித்த பல ரகசியங்களை பெற்று துபாயில் வைத்து விற்பனை செய்துள்ளனர். இந்த விசாரணை அறிக்கையை மத்திய உளவு அமைப்புகள் என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் இடதுசாரி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள இந்த செய்தி  கேரள அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்