'இப்படி கோட்டை விட்டுட்டீங்க'... 'திடீரென மாயமான 1500 பசுக்கள்'... கலெக்டருக்கு நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > இந்தியா1500 பசுக்கள் மாயமான புகாரின்பேரில் மாவட்ட ஆட்சியர் உள்பட 5 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017-ல் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பசுக்களை பாதுகாக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பசுக்களை துன்புறுத்துவோருக்கு கடும் தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. இந்த நிலையில் பசுக்களை பாதுகாப்பதில் அலட்சியமாக செயல்பட்டதாக மகராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் அமர்நாத் உபாத்யாயா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட ஆவணங்களின்படி மத்வாலியா பகுதியில் 2 ஆயிரத்து 500 இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நேரில் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 954 பசுக்கள் மட்டுமே இருந்துள்ளன. இதனால் மற்ற பசுக்கள் எங்கே என மாநில தலைமை செயலாளர் ஆர்.கே. திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். அதனைத்தொடர்ந்து பசுக்களை பாதுகாப்பதற்கு ஒதுக்கப்பட்ட 500 ஏக்கர் நிலத்தில், 328 ஏக்கர் நிலம் விவசாயிகள், நிறுவனங்களுக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது.
இதையடுத்து மகராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் அமர்நாத் உபாத்யாயா, 2 சப் கலெக்டர்கள், முதன்மை கால்நடைத்துறை அதிகாரி ராஜிவ் உபாத்யாயா உள்ளிட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த அதிரடி நடவடிக்கை உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.