"என்னை மட்டும் தான் எல்லாரும் டார்கெட் பண்றாங்க!... உண்மை வெளிய வரணும்னா 'இத' பண்ணுங்க!".. நடிகை ரியா பரபரப்பு கருத்து!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னை மட்டுமே அனைவரும் குறிவைத்து, பயங்கரவாதியை விட மோசமாக நடத்துவதாக நடிகை ரியா சக்ரபோர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பாலிவுட் சினிமாவில் நிலவும் நெப்போட்டிசமே காரணம் என சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாது அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியால் தான் சுஷாந்த் இந்த முடிவை எடுத்தார் எனவும் புகார் கொடுத்திருந்தனர் சுஷாந்தின் குடும்பத்தினர். அதோடு, சொத்துக்காக விஷம் வைத்து என் பிள்ளையை ரியா கொன்றுவிட்டார் என்று சுஷாந்தின் அப்பா தெரிவித்திருந்தார். அதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில், 'பயங்கரவாதியை விட மோசமாக நடத்தப்படுகிறேன், இப்போது நான் பேசியாக வேண்டும்' எனச் சொல்லி, நடிகை ரியா சக்ரபோர்த்தி இது தொடர்பாக என்.டி.டி.விக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
"என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. சுஷாந்தின் சம்பாத்தியத்தில் ஒரு ரூபாயை கூட நான் எடுத்துக் கொண்டதில்லை. அவரது வரவு செலவு கணக்கு விவரங்கள் அனைத்தும் வங்கியில் விரிவாக கிடைக்கும்.
மும்பை போலீசார் விசாரணை என்ற பெயரில் மிகவும் கடுமையாக நடந்து கொண்டனர். ஆனால், என்னை மட்டும் குறிவைப்பதன் மூலம் உண்மையை அறிந்து கொள்ள முடியாது. சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட அந்த வாரம் அவருடன் இருந்தது அவரது சகோதரி நீது தான். அது பற்றி யாரும் ஏன் பேசவில்லை?
சுஷாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவர் ஏன் அவரை விட்டுச் சென்றார்? விசாரணைக்கு எந்நேரமும் நான் தயார்.
நாங்கள் இருவரும் ஒரே சிந்தனையையும், செயல்பாட்டை கொண்டிருந்தோம். அதனால் எங்களது மனது ஒத்துப்போனது. எங்களது உறவு ஒரு விசித்திர கதை போன்றது. எங்களுக்குள் சிக்கலும் இருந்தது" என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்