'திடீரென யு-டர்ன் அடித்த நடிகை ரியா'... 'NCB விசாரணையில்'... 'வெளியான தகவலால் பெரும் பரபரப்பு!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாரியா சக்ரவர்த்தியிடம் நடத்தப்பட்டு வரும் NCB விசாரணை குறித்து வெளியாகியுள்ள தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், அவருடைய காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினா் மீது இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் கோணத்திலும் நடத்தப்பட்ட விசாரணையில், ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரும் (NCB) ரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ரியாவின் சகோதரர் ஷோயிக், மற்றும் சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டு NCB காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரியாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, அவரிடமும் NCB விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், விசாரணையின்போது BUD நிரப்பப்பட்ட சிகரெட்டை புகைத்ததாக ரியா ஒப்புக்கொண்டுள்ளதாக Times Now செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக விசாரணையில் ரியா, தான் எந்தவித போதை பொருட்களையும் உட்கொண்டதில்லை எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சுஷாந்த் உடன் போதை சிகரெட் புகைத்ததை ஒப்புக்கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தற்போது ரியா போதைப்பொருட்களை உட்கொண்டாரா இல்லையா என்பதைவிட, அவருக்கு இந்த போதைப்பொருட்கள் விஷயத்தில் வேறு எதிலாவது தொடர்புள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவே NCB முயற்சித்து வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்