முடிவுக்கு வந்தது மர்மம்!.. சுஷாந்த் சிங் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்கள்!.. மரணத்தின் காரணம் 'இது' தான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் இருக்கும் மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரது உள்ளுறுப்பு ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங்-இன் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது மரணம் தற்கொலை தான் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், சர்ச்சைகள் தொடர்ந்து வந்ததால் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்தனர். அதற்காக, அவரது உள்ளுறுப்புகளை மருத்துவ ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். மும்பையில் உள்ள ஜெஜெ மருத்துவமனை இந்த ஆய்வை மேற்கொண்டது.
இந்நிலையில், அவரது உடல் உறுப்புகளில் சந்தேகப்படும் வகையிலான எந்த நச்சுகளோ, வேதிப் பொருட்களோ இல்லை என மருத்துவமனை திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக காவல் துறையினர் தற்போது வரை, நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்பட 27 நபர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS