“சுஷாந்த் கேஸை நான் விசாரிக்கிறேன்!”.. ‘அசுர வேகத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரி!’.. மாநகராட்சி செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து புகழ்பெற்ற இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை மும்பை போலீஸார் 40-க்கும் மேற்பட்டோரிடம் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே திடீர் திருப்பமாக சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என்றும் அவர் சுஷாந்த் சிங்கிடம் பண மோசடி செய்ததாகவும் சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசாரிடத்தில் அளித்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இவ்வழக்கில் பாட்னா போலீசாருக்கு மும்பை போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், மும்பை போலீஸார் இவ்வழக்கில் ஒன்றுமே செய்யவில்லை என்றும் பீகார் அரசியல் தலைவர்கள் முன்வைத்த தொடர் குற்றச்சாட்டுக்களை அடுத்து, பீகாரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி, சுஷாந்தின் வழக்கை விசாரிக்க மும்பை வந்தார்.
ஆனால், மும்பை வந்தடைந்த அவரை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கண்டிப்புடன் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அதற்கு அடையாளமாக அவரது கையில் முத்திரையும் குத்தியுள்ளதால் இவ்வழக்கு இன்னும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனினும் மாநிலம் விட்டு மாநிலம் வரும் யாருக்கும் இந்த கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிகள் பொருந்தும் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்