"எல்லா பொண்ணுங்களும்"... கருக்கலைப்பு விஷயத்தில்.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண்கள் கருக்கலைப்பு செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
திருமணமாகாத பெண் ஒருவர், தனது கருவை கலைக்க அனுமதி கோரி வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த பெண்ணின் வழக்கை தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பென்ச், இது தொடர்பாக தீர்ப்பை தற்போது அளித்துள்ளது.
அந்த வகையில், ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என முடிவு எடுத்தால் அதை மருத்துவ முறையில் செய்ய உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதிபதி தலைமையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என முடிவு எடுத்தால் அதை மருத்துவ முறையில் செய்ய உரிமை உண்டு. கருக்கலைப்பு என்பது சட்ட விரோதமாகாது. இந்த உரிமையை மருத்துவக் கருவுறுதல் சட்டம் 1971 (MTP) அனுமதிக்கிறது. அதே போல, திருமணம் ஆன பெண்கள் அல்லது திருமணமாகாத பெண்கள் என்ற பாகுபாடும் இதற்கு கிடையாது.
அனைத்து பெண்களுக்கும், எந்த சூழ்நிலையிலும் மருத்துவ முறையில் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வமாக இடம் உண்டு" என கூறியுள்ளது.
தொடர்ந்து, "சில சமயங்களில் திருமண உறவுகளில் பெண்கள் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டு, கர்ப்பம் தரிக்கவும் ஆளாகின்றனர். வலுக் கட்டாயமாக கருத்தரித்த பெண்களை அதிலிருந்து காப்பாற்றவும் இந்த சட்டம் அனுமதிக்கிறது. எனவே, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பிழைத்து வரும் பெண்களைப் போலவே திருமணம் ஆகி வலுக்கட்டாயமாக கர்ப்பம் தரிக்கப்படும் பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் கருக்கலைப்பு தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ள இந்த உத்தரவு தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்