'Final year மாணவர்கள் எல்லாரும் ரெடியா இருங்க'!.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!.. அடுத்தடுத்து வெளியான தகவல்களால்... அதிர்ச்சியில் மாணவர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

'Final year மாணவர்கள் எல்லாரும் ரெடியா இருங்க'!.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!.. அடுத்தடுத்து வெளியான தகவல்களால்... அதிர்ச்சியில் மாணவர்கள்!

இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்,

கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று தெரிவித்து, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க கூடாது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, "யுஜிசி வழிக்காட்டுதல்படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடைபெறும். தேர்வு அட்டவணை, ஆன்லைன் மூலம் தேர்வா அல்லது நேரடியாகவா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்" என்று அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்