18 வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவர்.. லேடி கெட்டப்பில் வந்து சொன்ன விஷயம்.. நம்பிய மக்களுக்கு காத்திருந்த ஷாக்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாளி தேவியின் மறு அவதாரம் என்றும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை உடையவர் என்றும் கூறி, உத்தரபிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றிய நபரை மாநில காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
Also Read | இந்திய வரலாற்றில் முக்கியமான நாள்.. விமான போக்குவரத்து அமைச்சர் உருக்கம்.. ஆஹா இப்படி ஒரு பிளான் இருக்கா..?
சக்தி
பீகாரின் கைமூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் நோனியா. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மீண்டும் திரும்பி வந்த அவர், 18 ஆண்டுகள் தவத்தில் இருந்ததாகவும் காளி தேவியின் அருள் தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், புற்றுநோய், மலட்டுத்தன்மை போன்ற குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தும் சக்தியை தெய்வம் தனக்கு கொடுத்ததாக கூறியுள்ளார்.
இதனால் பொதுமக்களிடையே கூடிய சீக்கிரத்தில் முகேஷ் பிரபாலமாகியுள்ளார். இதனை தொடர்ந்து வாரணாசி அருகே காளி மடம் ஒன்றையும் அவர் துவங்கியுள்ளார். மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பணமும் பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், அந்த மடத்தில் இருந்த பூசாரி ராம் பெரோஸ் என்பவருக்கும் முகேஷ்-க்கும் இடையே பணத்தை பங்கிட்டுக்கொள்வதில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது.
நோட்டீஸ்
இதனை பார்த்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கவே செயின்பூர் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்திருக்கின்றனர். அதற்குள் சுதாரித்த முகேஷ் மற்றும் ராம் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்நிலையில், அவரை பிடிக்க காவல்துறையினர் அவருடைய புடைப்படத்துடன் கூடிய நோட்டீஸ்களை ஒட்டியுள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
முகேஷ் பல வருடங்களாக ஆந்திராவில் கூலி வேலை பார்த்து வந்ததும், அதன் பின்னர் ஊருக்கு திரும்பிய அவர், தன்னை காளியின் அவதாரம் எனக்கூறி மக்களை ஏமாற்றி வந்ததும் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் பீஹார் மாநில காவல்துறையினர் முகேஷை வலைவீசி தேடிவருகின்றனர்.
Also Read | JEE மெயின் 2022 தேர்வு முடிவுகள்.. செண்டம் அடிச்ச 24 மாணவர்கள்.. அசர வச்ச மாநிலம்..!
மற்ற செய்திகள்