Viruman Mobiile Logo top

ஆத்தாடி.. இந்தியாவுலயே நீளமான சரக்கு ரயில்.. கிலோமீட்டர் கணக்குல நீளுதே.. அமைச்சர் பகிர்ந்த மிரளவைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயிலான சூப்பர் வாசுகி முதன்முறையாக இயக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆத்தாடி.. இந்தியாவுலயே நீளமான சரக்கு ரயில்.. கிலோமீட்டர் கணக்குல நீளுதே.. அமைச்சர் பகிர்ந்த மிரளவைக்கும் வீடியோ..!

75வது சுதந்திர தின விழா

இந்தியாவில் நேற்று 75வது சுதந்திர தின விழா கடந்த 15 ஆம் தேதி விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்தியா முழுவதும் பல்வேறு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்ட நிலையில், முதன் முறையாக ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் மூவர்ண கொடியை ஏற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மக்கள் தங்களது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினர். மேலும், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல அரசுத் திட்டங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. அந்த வகையில் இந்தியாவின் நீளமான சரக்கு ரயிலான சூப்பர் வாசுகி சுதந்திர தின விழா அன்று தனது பயணத்தை துவங்கியது.

சூப்பர் வாசுகி

3.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரயிலில் 6 எஞ்சின்கள் மற்றும் 295 பெட்டிகள் இருக்கின்றன. நிலக்கரியை சுமந்து செல்ல இந்த ரயில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அளித்திருக்கும் அறிக்கையில்,'இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 295 பெட்டிகளில் குமார் 27,000 டன் நிலக்கரியை இந்த ரயில் சுமந்து சென்றிருக்கிறது. சராசரியாக இந்த ரயில் ஒரு ரயில் நிலையத்தை கடக்க 4 நிமிடங்கள் பிடிக்கிறது. ஒரே முறையில் அதிக எரிபொருளை சுமந்து செல்லும் இந்திய போக்குவரத்து திட்டங்களில் முதலிடம் பிடித்திருக்கிறது சூப்பர் வாசுகி.

இந்த ரயில் திங்கள் கிழமை மதியம் 1.50 மணிக்கு சத்தீஸ்கரில் உள்ள கோர்பாவிலிருந்து புறப்பட்டு, நாக்பூரில் உள்ள ராஜ்நந்த்காவ் வரையிலான 267 கிமீ தூரத்தை கடக்க சுமார் 11.20 மணி நேரம் ஆனது. உலகின் நீளமான சரக்கு ரயில் ஆஸ்திரேலியாவில் இயக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் இரும்பு தாதுக்களை எடுத்துச் செல்ல இந்த BHP Iron Ore ரயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நீளம் 7.35 கிலோமீட்டர் ஆகும். உலகளவில் இதுவே நீளமான சரக்கு ரயிலாக இருந்துவருகிறது.

வைரல் வீடியோ

இந்நிலையில், இந்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் வாசுகி ரயிலின் இயக்கத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர்,"சூப்பர் வாசுகி, 6 லோகோக்கள் & 295 வேகன்கள் மற்றும் 25,962 டன் மொத்த எடை கொண்ட இந்தியாவின் மிக நீளமான (3.5 கிமீ) ரயிலின் இயக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. .

 

SUPERVASUKI, LONGESTTRAIN, INDIANRAILWAY, சூப்பர்வாசுகி, நீளமானரயில், இந்தியன்ரயில்வே

மற்ற செய்திகள்