"இப்போ நாடு இருக்குற நிலைமை'ல.. பெருசா ஒரு நல்லது செய்யணும்.." 'கொரோனா'வைக் கட்டுப்படுத்த 'சுகாரதனா', 'தக்ஷா' இணைந்து எடுத்த 'அசத்தல்' முடிவு!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி கிடைக்காமல், கடும் தட்டுப்பாடுகளும் நிலவி வருகிறது.
இந்நிலையில், பெங்களூரு’வை சேர்ந்த சுகாரதனா (Sugaradhana) அமைப்பு மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா (Daksha) குழுக்கள் இணைந்து, தமிழக அரசுடன் சேர்ந்து, இந்த கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, அசத்தல் முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது. சுகாரதனாவின் ஆர்கானிக் கிருமி நாசினி மற்றும் தக்ஷா குழுவினர் உருவாக்கிய டிரோன் ஆகியவற்றை பயன்படுத்தி, திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினிகளை தெளித்து வருகிறார்கள்.
இதற்காக, டிரோன் (Ultra Low Volume Sprayer Drones) மற்றும் Blower sprayers ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது, இந்த குழு. இந்த முன்னெடுப்பு பற்றி, சுகாரதனா அமைப்பின் நிறுவனரான கார்த்திக் நாராயணன் (Karthik Narayanan) கூறுகையில், 'இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட Sodium hypochlorite ரசாயன கிருமி நாசினியை விட, இந்த ஆர்கானிக் கிருமி நாசினிகள் அதிக பயன் தருவதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆர்கானிக் கிருமி நாசினி, மருத்துவமனை, ஆப்ரேஷன் தியேட்டர், மால்கள் போன்ற உள்புறமான இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், வெளிப்புறங்களில் தெளித்தாலும் பயன் தரும் என விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரால் நிரூபணமும் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை, தமிழக அரசின் உதவியுடன், மருத்துவர்கள் செந்தில் குமார் மற்றும் கார்த்திக் நாராயணன் ஆகியோரின் தலைமையிலும், அபூர்வா, ஐஏஎஸ், அவர்களின் வழிகாட்டுதலின் படியும் நிகழ்த்தி வருகிறார்கள், இந்த குழுவினர். கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, இதே போன்றொரு முயற்சி சென்னையிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அப்போது நல்ல முடிவுகள் கிடைத்திருந்தது.
அதே போல, தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்த கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வரும் நிலையில், இதன் காரணமாக சுமார் 40 சதவீதம் வரை தொற்று பாதிப்பு அந்த பகுதிகளில் குறைந்துள்ளது. மேலும், இந்த கிருமி நாசினி, மனிதர்கள் மீது தெளிக்கப்பட்டால் கூட, எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது நிரூபணம் ஆகியுள்ளது' என கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார்.
Day 1/5
Day 2/5@Ak_Trendshttps://t.co/Rjp5kEcwZjhttps://t.co/1GthLBs88ahttps://t.co/oZ0F9FokA6
— Karthik Narayanan (@DrKNarayanan) May 9, 2021
ஒரு புறம், ஆக்சிஜன் மற்றும் உடனடி மருத்துவ வசதி கிடைக்காமல், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகப்பட்டுக்கொண்டே வரும் இந்த வேளையில், மறுபுறம், இந்த கொடிய தொற்றினைக் கட்டுப்படுத்த, சுகாரதனா மற்றும் தக்ஷா குழுவினர் எடுத்துள்ள இந்த சிறப்பான முயற்சி, பொது மக்களின் பாராட்டுக்களை பெற்றிருப்பதோடு, இந்த கொடிய நோயை சீக்கிரமே வென்று விடலாம் என்ற பெரும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது!
மற்ற செய்திகள்