ஒண்ணுமே தெரியலை ஒரே இருட்டா இருக்கு.. தலைகீழாக மாறி போன எக்ஸாம்.. பெற்றோர் செய்த செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிகார்:  தேர்வு எழுதுவதற்கு முறையான ஏற்பாடு செய்யாததால்  வாகன வெளிச்சத்தில் மாணவர்கள் சிரமத்துடன் தேர்வு எழுதிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒண்ணுமே தெரியலை ஒரே இருட்டா இருக்கு.. தலைகீழாக மாறி போன எக்ஸாம்.. பெற்றோர் செய்த செயல்!

நம்ம ஊர்ல கட்டிப்பிடி வைத்தியம் மாதிரி.. அவுங்க ஊர்ல தலையணை போட்டி.. ரவுண்ட் கட்டிய வீரர்கள்!

முன்னொரு காலத்தில் நவீன வளர்ச்சியை எட்டாத நிலையில், குடிசை வீட்டில் வசித்து வரும் மாணவர்களுக்கு தெருவிளக்கு தான் வெளிச்சம். காலையில் சீக்கிரமாக எழுந்து கண்கள் சொர்க்க படித்த காலத்தை அசைபோடுபவர்கள் அதிகம். குறிப்பாக முதியவர்கள் பலரும் தங்களது பேரன்களிடம் நாங்கலாம் அந்த காலத்துல தெருவிளக்கு வெளிச்சத்துல தான் படிச்சோம் என பெருமையாக பேசுவார்கள். கொஞசம் நேரம் மின்சாரம் இல்லாவிட்டால் இன்றைய தலைமுறையினர் தவித்து போவார்கள்.

ஆனால் இதுபோன்ற நவீன வளர்ச்சிகள் இருந்தும் மாணவர்கள் வாகன வெளிச்சத்தில் தேர்வு எழுதிய அவலம் நீடித்துள்ளது. பிகார் மாநிலம் கிழக்கு சாம்பரானின் மோதிஹாரி நகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் 12ம் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. மகாராஜா ஹரேந்திர கிஷோர் சிங் கல்லூரியில் தேர்வு எழுதுவதற்கு சுமார் 400 மாணவர்கள் வந்திருந்தனர். தேர்வு நடைபெறும் சிறப்பு வகுப்பில் மாணவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

Students who wrote the exam without light in Bihar

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்த சமாதானம் செய்த கல்லூரி நிர்வாகம் மதியம்.1.45 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும்படி திட்டமிட்டிருந்த தேர்வு, மாலை 4 மணிக்கு தான் தொடங்கியது. மாலை 6 மணிக்கு மேல் இருட்ட தொடங்கியதால் மாணவர்கள் தேர்வறையில் மின்சாரம் இல்லை என்பது தெரியவந்தது. கல்லூரி நிர்வாகம் ஜெனரேட்டர் வசதியை ஏற்பாடு செய்தும் அனைத்து வகுப்புகளுக்கும் மின்சாரத்தை முறையாக வழங்க முடியவில்லை.

நல்ல வெளிச்சம் இருக்கும்போதே தேர்வு எழுத திணறும் மாணவர்கள், வெளிச்சம் இல்லாம் ஸ்தம்பித்தி போயினர். பின்பு பெற்றோர்கள் தாங்கள் வந்த வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டு, அந்த வெளிச்சத்தில் மாணவர்களை தேர்வு எழுத வைத்தனர்.தேர்வு முடிந்தவுடன் இந்த சம்பவம் குறித்து பெற்றோர்கள் மாவட்ட கல்வி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த கல்லூரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்த முகமது ஜின்னா டவர் விவகாரம்!.. குண்டூரில் கொந்தளித்த பாஜக.. அரசு எடுத்த அதிரடி முடிவு!

STUDENTS, EXAM, BIHAR, CLASS 12 EXAM, பிகார், தேர்வு, மாணவர்கள்

மற்ற செய்திகள்