“7.30க்கு க்ளாஸ் போகணும்.. ஆனா 7.40க்கு தான் பஸ் வருது.. கஷ்டமா இருக்கு!”.. 'ட்விட்டரில்' மாணவர் வைத்த 'கோரிக்கை'!.. ட்விட்டரிலேயே நடந்த 'நெகிழ வைக்கும்' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசாவில் பேருந்து நேரம் காரணமாக பள்ளிக்கு தினமும் தாமதமாக செல்வதாக மாணவர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதும், அந்த மாணவனின் ட்வீட்டை அடுத்து, பேருந்தின் நேரத்தையே போக்குவரத்துத்துறை மாற்றியமைத்துள்ள நிகழ்வு நெகிழ வைத்துள்ளது.
ஒடிசாவை சேர்ந்த மாணவர் சாய் அன்வேஸ். காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு 7.40 மணிக்கு செல்லவேண்டியிருப்பதாகவும், பேருந்து தாமதமாக வருவதனால் இந்த பிரச்சனையை, தான் சந்திப்பதாகவும் குறிப்பீட்டுள்ள சாய் அன்வேஸ், தனது பேருந்து நேரத்தை மாற்றிக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று ட்விட்டரில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கையை வைத்த அந்த மாணவர், தனது அந்த ட்விட்டர் பதிவில் புவனேஸ்வர் போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர், போத்ரா ஐபிஎஸ் அவர்களை டேக் செய்து ட்வீட் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், சாய் அன்வேஸ், புவனேஸ்வர் எம்பிஎஸ் பள்ளியில் படிக்கும், தனக்கு லிங்கிப்பூரிலிருந்து வரும் தனது வழக்கமான பேருந்து தாமதமாக வருவதால், தினமும் பள்ளிக்கு தாமதமாக செல்ல வேண்டிய சூழல் உண்டாவதாகவும், இதனால் பல சிக்கல்களை சந்திப்பதாகவும், இதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டை அடுத்த சில மணிநேரங்களிலேயே இதற்கு பதிலளித்த புவனேஸ்வர் போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர் அருண் போத்ரா, “உங்களது பேருந்து நேரம் இப்போது 7 மணியாக மாற்றப்பட்டு விட்டது. இனி நீங்கள் வகுப்புக்கு தாமதமாக செல்ல வேண்டியதில்லை” என ரிட்வீட் செய்துள்ளார்.
Dear Sai#MoBus moves with love of commuters like you. The timing of your bus will be changed from Monday. The first bus will start at 7 AM. You won't be late for school.
With affection from entire team of @CRUT_BBSR. https://t.co/kimd85bXIg
— Arun Bothra (@arunbothra) January 9, 2021
ஒரு மாணவர் படும் சிரமத்தை உணர்ந்து பேருந்து நேரத்தை உடனடியாக மாற்றியமைத்த புவனேஸ்வர் போக்குவரத்து துறையையும், அதுவும் ட்விட்டரில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து, உடனடியாக செய்யப்பட்டுள்ள மாற்றத்தையும் சமூக வலைத்தள வாசிகள் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்