‘ஐஸ்கிரீமில் போதை மருந்து’.. ‘ரயிலில் டிக்கெட் பரிசோதகரால்..’ மாணவிக்கு நடந்த ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாரயிலில் மாணவி ஒருவருக்கு ஐஸ்கிரீமில் போதை மருந்து கலந்து கொடுத்து டிக்கெட் பரிசோதகர் அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலிருந்து ராஞ்சி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த மாணவி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக டிக்கெட் பரிசோதகர் மற்றும் பேன்டரி பணியாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவிக்கு ஐஸ்கிரீமில் போதை மருந்து கலந்து கொடுத்த அவர்கள் அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இகுறித்து ட்விட்டரில் புகார் அளித்துள்ள மாணவிக்குத் தெரிந்த பெண் ஒருவர் ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளையும் அதில் டேக் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒரு மாணவி என்பதால் சட்டரீதியிலான நடவடிக்கைகளால் அவருடைய எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்பதால் முதல் தகவல் அறிக்கை பதியாமலேயே இந்தப் புகார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் பதிவில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பெண் கூறியுள்ளதில் உண்மை இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட ராஞ்சியைச் சேர்ந்த சரோஜ் என்ற டிக்கெட் பரிசோதகரும், பேன்ட்ரி பணியாளரும் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.