"காசு இல்லைன்னாலும்.. நான் இருக்கேன்".. காலணி தைப்பவரை நெகிழ வைத்த உணவு விற்பனையாளர்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாலையோர உணவு விற்பனையாளர் ஒருவர் காலனி தைக்கும் தொழிலாளி ஒருவருக்கு இலவசமாக உணவு வழங்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"காசு இல்லைன்னாலும்.. நான் இருக்கேன்".. காலணி தைப்பவரை நெகிழ வைத்த உணவு விற்பனையாளர்.. வீடியோ..!

Also Read | "அவரு டி 20ல இருந்து Retire ஆகணும், ஏன்னா".. கோலி பத்தி அக்தர் சொன்ன விஷயம்!!

நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி விட்ட மக்களிடையே மனிதம் குறித்த பார்வையும் நிச்சயம் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் விதமாக தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் காலணி தைக்கும் தொழிலாளி ஒருவர் சாலையோர உணவு விற்பவரிடம் நின்று கொண்டிருக்கிறார். அப்போது அந்த உணவக உரிமையாளர் தொழிலாளியிடம் "ஒரு நாளைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து விட்டீர்களா?" என்று கேட்கிறார். மேலும், பணம் இல்லை என்றாலும் தனது கடைக்கு வரும்படியும் உதவி செய்யவே தான் இருப்பதாகவும் கூறுகிறார்.

Street Food Vendor Gives Free Food To Cobbler video

இதனை கேட்ட தொழிலாளி நெகிழ்ந்து போகிறார். மேலும் அந்த உணவக உரிமையாளர் தட்டில் ரொட்டி, டால் ஆகியவற்றை வைத்து தொழிலாளிக்கு சாப்பிட கொடுக்கிறார். இந்த வீடியோவை ரஜத் உபாத்தியாய் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் "மனோஜ் பாய்க்கு பெரிய மனது" என அவர் குறிப்பிட்டுள்ளார். பார்ப்போரை நெகிழ வைக்கும் இந்த நிகழ்வு டெல்லியில் உள்ள நேரு நகர் பகுதியில் நடந்திருக்கிறது.

அந்த வீடியோவில் தனது நடமாடும் உணவகத்திற்கு அருகில் நின்றிருந்த இளைஞரிடம் பேசும் மனோஜ் எனும் கடை உரிமையாளர் அந்த தொழிலாளியை மகனே என அழைத்து "என்ன வேலை செய்கிறீர்கள்?" என கேட்கிறார். அப்போது அதற்கு பதில் அளித்த தொழிலாளி தான் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டு வருவதாக தெரிவிக்கிறார். இதனைக் கேட்ட மனோஜ் உடனடியாக பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னுடைய கடைக்கு வரும்படி தொழிலாளியை வலியுறுத்துகிறார்.

Street Food Vendor Gives Free Food To Cobbler video

இந்த வீடியோ இதுவரையில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ இளைய தளங்களில் வைரலாக பரவ நெட்டிசன்கள் மனோஜின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். இந்த பதிவில் ஒருவர் "உலகத்தின் மிகச் சிறந்த வீடியோ" என கமெண்ட் செய்து உள்ளார். மற்றொருவர் "எளிமையான மக்களின் அன்பு என்றுமே பரிசுத்தமானது" என்றும் கமெண்ட் செய்திருக்கிறார். இப்படி மனோஜை பல்வேறு விதங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

 

Also Read | வெள்ளிக்கிழமை 5 மணி வரைதான் டைம் இருக்கு.. தீவிர முயற்சியில் எலான் மஸ்க்.. பரபர பின்னணி..!

STREET FOOD, VENDOR, FREE FOOD

மற்ற செய்திகள்