'இந்தியா' முழுவதும் 3800-ஐ தாண்டிய 'பலி' எண்ணிக்கை... 'அதிகபட்ச' இறப்பை பதிவுசெய்த 'மாநிலங்கள்' இதுதான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3867 ஆக உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்க்கு சுமார் 1 லட்சத்து 32 ஆயிரத்து 657 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 73 ஆயிரத்து 560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 54 ஆயிரத்து 441 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3867 ஆக உள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1577 பேர் இறந்து இருக்கின்றனர். 829 பேருடன் குஜராத் 2-வது இடத்தில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் 281 பேரும், மேற்கு வங்காளத்தில் 269 பேரும், டெல்லியில் 231 பேரும், உத்தர பிரதேசத்தில் 155 பேரும், ராஜஸ்தானில் 160 பேரும், தமிழ்நாட்டில் 103 பேரும் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.
மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை:-
அசாம் - 4
பீகார் - 11
சண்டிகர் - 3
டெல்லி - 231
குஜராத் - 829
அரியானா - 16
இமாச்சல பிரதேசம் - 3
ஜம்மு-காஷ்மீர் - 21
ஜார்க்கண்ட் - 4
கர்நாடகா - 42
கேரளா - 4
மத்திய பிரதேசம் - 281
மகாராஷ்டிரா - 1,577
மேகாலயா - 1
ஒடிசா - 7
பஞ்சாப் - 39
ராஜஸ்தான் - 160
தமிழ்நாடு - 103
தெலுங்கானா - 49
உத்தரகாண்ட் - 2
உத்தரபிரதேசம் - 155
மேற்கு வங்காளம் - 269
மொத்தம் - 3,867
மற்ற செய்திகள்