இது சரிபட்டு வராது... போடுறா 'ஜூலை 31' வர லாக்டவுன... அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இது சரிபட்டு வராது... போடுறா 'ஜூலை 31' வர லாக்டவுன... அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'!

பின்னர், நாட்கள் செல்ல செல்ல நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமான இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், பாதிப்பு குறைவுள்ள பகுதிகளில் மட்டும் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. அதே போல தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ஐந்து மாவட்டங்களில் ஜூன் 30 வரை ஊரடங்கை அறிவித்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி ஜூலை 31 வரை மாநிலம் முழுவதும் பொது முடக்கத்தை நீட்டிக்கப்படுவதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். முன்னதாக, மாநிலம் முழுவதுமான ஊரடங்கு வரும் ஜூன் 30 அன்று முடிவடையும் நிலையில், மாநிலத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்