'வரப்போகும் மிகப்பெரிய விருப்ப ஓய்வு'... 'அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள பிரபல வங்கி'... யார் யாருக்கு பொருந்தும்?
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் மிகப்பெரிய அளவில் விருப்ப ஓய்வு திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் மிகப்பெரிய விருப்ப ஓய்வு திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்திற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு இயக்குநர் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது இந்தாண்டு டிசம்பரில் தொடங்கி வரும் பிப்ரவரி வரை நீடிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே விருப்ப ஓய்வு பெற தகுதியுள்ளவர்கள் பட்டியலில் 30 ஆயிரம் பேர் உள்ள நிலையில் இதில் 30% பேர் அத்திட்டத்தைத் தேர்வு செய்யும் பட்சத்தில் வங்கிக்கு நிகர அளவில் ஆயிரத்து 662 கோடி ரூபாய் மீதமாகும் எனத் தெரிகிறது. மேலும் 25 ஆண்டிற்கு மேல் பணியாற்றியவர்கள் அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும் எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்