ரொம்ப 'ஹேப்பியா' இருக்கு...! 'நாங்க தான் இந்தியால ஸ்புட்னிக்-V தடுப்பூசிய தயாரிக்க போறோம்...' - உறுதி செய்த நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் ஸ்புட்னிக்-V தடுப்பு மருந்து வரும் செப்டம்பர் மாதம் முதல் தயாரிக்கவுள்ளதாக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா இதற்கு முன்னர் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்தை இந்தியாவிலேயே தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தையும் வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்கும் அனுமதியை சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தகவலை ரஷ்யாவின் ஆர்டிஎஃப்ஐ (Russian Direct Investment Fund) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து சீரம் நிறுவனத்தின் அடார் பூணாவாலா செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, 'ஆர்டிஎஃப்ஐ (Russian Direct Investment Fund)வுடன் இணைந்து ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தை தயாரிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
சோதனை ஓட்டமாக முதற்கட்ட டோஸ் தயாரிப்பு செப்டம்பரில் தொடங்குகிறது. இந்தத் ஸ்புட்னிக்-V தடுப்பூசிகள் அதிக திறன் கொண்டதாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ளதால், இந்திய மக்களுக்கும் உலக மக்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசி கிடைக்கப்பெற வேண்டும்.
சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், அரசாங்கமும் இணைந்து கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
அதோடு, ஆண்டுக்கு 30 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கும் திட்டமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் சிஇஓ கிரில் டிமிட்ரியெவ் கூறும்போது, 'இந்த கூட்டு செயல் உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்