'யோவ்'... 'ஒய்ட்' பெட்ரோல் எல்லாம் போட்டு ஓட்றோம்யா.... 'பாத்துபோட்டு' குடுங்கய்யா... 'ஸ்பைஸ் ஜெட்' விமான 'டிக்கெட்' ரூ. 987... 'கொரோனா' பீதியால் வந்த 'விளைவு'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், உள்நாட்டில் பயணம் செய்வதற்கான சிறப்பு விற்பனையில், 987 ரூபாயிலிருந்து விமான டிக்கெட்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

'யோவ்'... 'ஒய்ட்' பெட்ரோல் எல்லாம் போட்டு ஓட்றோம்யா.... 'பாத்துபோட்டு' குடுங்கய்யா... 'ஸ்பைஸ் ஜெட்' விமான 'டிக்கெட்' ரூ. 987... 'கொரோனா' பீதியால் வந்த 'விளைவு'...

கொரோனா பீதியால் விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பல விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை குறைத்துக் கொண்டன. 200 பேர் வரை அமர்ந்து செல்லக்கூடிய வெளிநாட்டு விமானங்களில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே பயணிக்கும் அவலமும் தொடர்கிறது. இதனால் விமான நிறுவனங்கள் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அதிரடியாக தனது விமான டிக்கெட்களின் விலையை குறைத்துள்ளது. அந்நிறுவனம் உள்நாட்டில் பயணம் செய்வதற்கான சிறப்பு விற்பனையில், 987 ரூபாயிலிருந்து விமான டிக்கெட்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்று தொடங்கும் இந்த முன்பதிவு, வரும் 15ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சலுகையிலான டிக்கெட்டுகளை பயணிகள் முன்பதிவு செய்து அடுத்து ஆண்டு பிப்ரவரி 2021 வரை பயணத்திற்கு உபயோகித்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

உள்நாட்டில் பயணிக்க 987 ரூபாயும், வெளிநாடுகளுக்கான பயணத்துக்கு குறைந்தபட்சமாக 3,699 ரூபாயும் சிறப்புக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கிடைக்கும் என அந்த நிறுவனம் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

AIRLINE, SPICEJET, SPECIAL SALE, SELL TICKET