'ரோட்டு கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த மக்கள்'...'அசுர வேகத்தில் வந்த கார்'...குலை நடுங்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாலையோர கடையில் நின்று கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்த மக்கள் மீது, வேகமாக வந்த கார் மோதியதில்  7 பேர் படுகாயமடைந்தார்கள்.

'ரோட்டு கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த மக்கள்'...'அசுர வேகத்தில் வந்த கார்'...குலை நடுங்க வைக்கும் வீடியோ!

பெங்களூருவில் உள்ள ஹச்எஸ்ஆர் பகுதியில் உள்ள உணவகத்தில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் சிலர் நடைபாதையில் நின்று கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை எல்லாம் இடித்து தள்ளிவிட்டு நடைபாதை மீது ஏறியது. அப்போது அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த 7 பேரும் தூக்கி வீசப்பட்டார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதனிடையே காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். உடனடியாக அங்கிருந்து தப்பிக்க முயற்ச்சித்த ஓட்டுனரை அங்கிருந்தார்கள் மடக்கி பிடித்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஓட்டுனரை கைது செய்தார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.

காயம் அடைந்தவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே தறிகெட்டு ஓடிய கார் பொதுமக்கள் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, BENGALURU, CCTV, HSR LAYOUT