இப்படி ஒரு பிரச்சனையுடன் பள்ளிக்கு சென்றுவந்த மாணவி ... நடிகர் சோனு சூட் போட்ட ட்வீட்.. நெகிழ்ந்துபோன மக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு காலுடன் சிரமப்பட்டு பள்ளிக்குச் சென்றுவந்த மாணவிக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்வதாக அறிவித்திருப்பது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

இப்படி ஒரு பிரச்சனையுடன் பள்ளிக்கு சென்றுவந்த மாணவி ... நடிகர் சோனு சூட் போட்ட ட்வீட்.. நெகிழ்ந்துபோன மக்கள்..!

சோனு சூட்

பஞ்சாப் மாநிலத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்த சோனு சூட், பொறியியல் படித்துவிட்டு மாடலிங் துறைக்குள் கால்பதித்தார். 1999-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான "கள்ளழகர்" என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக சோனு சூட் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நெஞ்சினிலே, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களின் மூலமாக மக்களிடையே பிரபலமானார்.

Sonu Sood offers help to a differently abled girl

கொரோனா சமயத்தில், பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகள் சொந்த ஊர் திரும்ப இலவச விமான பயணத்தை இவர் ஏற்பாடு செய்துகொடுத்தார். இதன்மூலம் நாடே சோனு சூட்டை பாராட்டியது. மேலும், உதவி வேண்டி பொதுமக்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தாலும் சோனு சூட் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

கலங்க வைத்த மாணவி

இந்நிலையில், பீஹார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தினந்தோறும் பள்ளிக்கு ஒரு காலுடன் நடந்து செல்லும் வீடியோ சமீபத்தில் சமூக வலை தளங்களில் வைரலானது. விபத்து ஒன்றில் தனது ஒரு காலை மாணவி  இழ்ந்திருக்கிறார். இருப்பினும் தனது கல்வியை தொடர விரும்பிய அவர், ஒரு காலுடன் பள்ளிக்குச் சென்றுவந்திருக்கிறார். ஒரு கிலோமீட்டர் தூரம் தினந்தோறும் சிரமப்பட்டு மாணவி நடந்துசென்ற வீடியோ பலரையும் கலங்க வைத்தது.

Sonu Sood offers help to a differently abled girl

உதவி

இந்த வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூட், உடனடியாக மாணவிக்கு உதவுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,"அவருக்கான டிக்கெட்டை வழங்கியுள்ளேன். இனி அவர் இரண்டு கால்களுடன் பள்ளிக்குச் செல்லலாம்" எனப் பதிவிட்டு அவருடைய அறக்கட்டளையை குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவருக்கு விரைவில் செயற்கை கால் பொருத்தப்பட இருக்கிறது. 

Sonu Sood offers help to a differently abled girl

மேலும், இந்த சிறுமியின் வீடியோ வைரலானதை தொடர்ந்து, உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மூன்று சக்கர வாகனத்தை சிறுமிக்கு பரிசாக அளித்திருக்கிறார்கள். இதனை உள்ளூர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Sonu Sood offers help to a differently abled girl

இந்நிலையில் ஒரு காலுடன் பள்ளிக்குச் சென்றுவந்த சிறுமிக்கு உதவி செய்வதாக நடிகர் சோனு சூட் அறிவித்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

SONUSOOD, GIRLSTUDENT, BIHAR, சோனுசூட், மாற்றுத்திறனாளிமாணவி, உதவி

மற்ற செய்திகள்