RRR Others USA

அம்மா தூய்மை பணியாளராக பணிபுரியும் அதே பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வந்த MLA மகன்.. பஞ்சாப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட லாப் சிங் உகோக் என்பவர் தனது தாய் தூய்மை பணியாளராக பணிபுரியும் அதே பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ வைத்து இருக்கிறது.

அம்மா தூய்மை பணியாளராக பணிபுரியும் அதே பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வந்த MLA மகன்.. பஞ்சாப்பில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

பஞ்சாப் மாநில தேர்தல்

சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று முதன்முறை ஆட்சியை பிடித்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி புதிய சாதனை படைத்தது.

இந்தக் கட்சியின் சார்பில் பாதவுர் தொகுதியில் போட்டியிட்டவர் லாப் சிங் உகோக். இவரது தாய் பல்தேவ் கவுர். இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் சுகாதாரப் பணியாளராக கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

son visits school as chief guest his mother works sweeper

வெற்றி

கடந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான சரண்ஜித் சிங் சன்னி பாதவுர் தொகுதியில் போட்டியிட்டார். இதனிடையே இந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் களமிறங்கிய உகோக்  37,550 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தார்.

son visits school as chief guest his mother works sweeper

கடமை தான் முக்கியம்

தேர்தலில் தனது மகன் வெற்றி பெற்றாலும் தூய்மை பணியை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கிறார் பல்தேவ் கவுர். இதுகுறித்து முன்னர் அவர் பேசுகையில்,“எனது மகன் தேர்தலில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரை எதிர்த்து போட்டியிட்டாலும் என் மகன் வெற்றி பெறுவார் என நம்பினோம். துடைப்பம் (ஆம் ஆத்மி கட்சியின் சின்னம்) எங்கள் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கம் ஆகும். நாங்கள் எப்போதும் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். என்னுடைய மகன் MLA-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் பள்ளியில் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன்” எனத் தெரிவித்திருந்தார்.

son visits school as chief guest his mother works sweeper

சிறப்பு விருந்தினர்

இந்நிலையில் தனது தாய் .பல்தேவ் கவுர் தூய்மை பணியாளராக இருக்கும் அதே பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் லாப் சிங் உகோக். அவருடன் அந்த பள்ளியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். செல்போன் ரிப்பேர் செய்யும் வேலை செய்து வந்த லாப் அதன் பிறகு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

AAP, MLA, SWEEPER, பஞ்சாப், லாப்சிங்உகோக், தூய்மை பணியாளர்

மற்ற செய்திகள்