அம்மாடியோவ்.. "அம்மா Retire ஆனதுக்கு இப்டி ஒரு சர்ப்ரைஸா?.." மகனின் பிரம்மாண்ட பிளான்.. "மொத்த ஊரே ஆடி போய்டுச்சு.."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அவ்வப்போது இணையத்தில், ஏதாவது மனதை நெகிழ வைக்கக் கூடிய அளவில் வீடியோக்கள் வெளியாகி வைரலாகும்.

அம்மாடியோவ்.. "அம்மா Retire ஆனதுக்கு இப்டி ஒரு சர்ப்ரைஸா?.." மகனின் பிரம்மாண்ட பிளான்.. "மொத்த ஊரே ஆடி போய்டுச்சு.."

Also Read | நண்பர்களை டின்னருக்கு அழைத்த தம்பதி.. "நைட்டு வீட்டுக்கு வந்து பாத்தப்போ 2 பேரையும் காணோம்.." கடைசியில் காத்திருந்த 'பயங்கரம்'!!

அப்படி அவர்கள் அன்பை செலுத்தும் போது, இது தொடர்பான வீடியோ அல்லது செய்திகளை பார்க்கும் போது, பார்ப்போர் மனதுக்கு கூட, ஒரு விதமான உருக்கம் தோன்றும்.

அப்படி ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் வெளியாகி, பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சுசீலா சவுகான். இவர் கடந்த 33 ஆண்டுகளாக, கேசர்புரா பகுதியில் அமைந்துள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து, தனது பணிக்காலம் முடிந்து, சமீபத்தில் பணி ஓய்வு பெற்றுள்ளார்.

son gifted helicopter ride for his mother after retirement

இதனை அறிந்து கொண்டு, அமெரிக்காவில் வசித்து வரும் அவரின் மகனான யோகேஷ் சவுகான் என்பவர், தாய் சுசீலா ஓய்வு பெறுவதற்கு சில தினங்கள் முன்பாக, சொந்த ஊரான அஜ்மீருக்கும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற தனது தாய்க்கு ஏதாவது வித்தியாசமாக ஒரு பரிசை கொடுக்க வேண்டும் என்றும் யோகேஷ் திட்டம் போட்டுள்ளார்.

அதன்படி, ஓய்வு பெற்ற தனது தாயை அங்கிருந்து அழைத்து வருவதை கொண்டாடும் விதமாக, ஹெலிகாப்டர் பயணம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் மகன் யோகேஷ். தனது தாய் மற்றும் தந்தையுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய யோகேஷை, அக்கிராம மக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். பொது மக்களின் வரவேற்பை சற்றும் எதிர்பாராத யோகேஷ், தனது தாயின் மகிழ்ச்சியையும் கண்டு பூரித்து போனார்.

son gifted helicopter ride for his mother after retirement

இது தொடர்பாக பேசும் யோகேஷ், ஓய்வு பெற்று வரும் தனது தாய்க்கு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணியதாகவும், அதனை மறக்க முடியாத தருணமாக மாற்ற ஹெலிகாப்டர் பயணத்தை தேர்வு செய்ததாகவும் யோகேஷ் தெரிவித்துள்ளார். அதே போல, இத்தனை கூட்டத்தை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், பலரும் மகன் தாய்க்கு கொடுத்த வரவேற்பை பாராட்டி வருகின்றனர்.

Also Read | சாலை ஓரம்.. வாலிபருக்கு நேர்ந்த துயரம்.. "சுத்தி இருந்தவங்க வேடிக்கை தான் பாத்துட்டு இருந்தாங்க.." உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்

RAJASTAN, HELICOPTER, HELICOPTER RIDE, MOTHER, RETIREMENT, SON

மற்ற செய்திகள்