இந்த மாசமும் 'சம்பளம்' கட்... நெலம ரொம்ப மோசமா இருக்கு.. அறிவித்த 'விமான' நிறுவனங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பல முன்னணி நிறுவனங்கள் கடும் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது.
தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை சம்பளங்களை குறைத்தும், ஊழியர்களை குறைத்தும் வருகின்றது. இந்நிலையில், பல விமான நிறுவனங்கள் ஜூலை மாதமும் சம்பள குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. பட்ஜெட் ஏர்லைன்ஸான இண்டிகோ, சில பைலட்டுகளின் சம்பளம் 45 சதவீதம் குறைக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. அதே போல, நிறுவன ஊழியர்கள் சிலரை சம்பளமில்லாமல் விடுப்பு எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விஸ்தாரா நிறுவனம், 40 சதவீதத்திற்கும் அதிகமான பணியாளர்களின் சம்பளத்தில் 5 முதல் 20 சதவீதம் வரை மேலும் பிடித்தம் செய்வதாக தெரிவித்துள்ளது. முன்னணி நிறுவனமான ஏர்ஏசியா இந்தியா நிறுவனமும் விமானிகளின் சம்பளத்தில் 40 சதவீதம் குறைக்கப்படும் என அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களிலும் விமானிகளின் சம்பளத்தை 40 சதவீதம் குறைத்து ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது.
அதே போல கோ ஏர் விமான நிறுவனமும் தங்களது 90 சதவீத ஊழியர்களுக்கு ஜூலை மாதமும் சம்பளமில்லாத விடுப்பில் இருந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்